தமிழ்ஆட்ஸ்.வலை தற்போது இலவசமாக

>

தமிழ்ஆட்ஸ்.வலை யில் விளம்பரம் செய்ய கொஞ்சம் காசு கொடுக்கவேண்டும் என்று முன்னர் இந்தப் பதிவை எழுதியிருந்தேன்.

ஆனால் அங்கு யாரும் காசு கொடுத்து விளம்பரம் செய்ய முன்வரவில்லை. இதையடுத்து அதை லோகேஷ் இலவச சேவையாக மாற்றி உள்ளார்.

யோசிக்க வேண்டாம் உங்க வலைப்பதிவை விளம்பரப்படுத்த ஒரு சின்ன படத்தை எடுத்துக்கொண்டு தமிழ்ஆட்ஸ்.வலை க்குப் போங்க.
.......................
டைட்டானிக் நகைச்சுவை கலவை பார்க்க மறந்துவிடாதீர்கள்.
http://www.sarugu.com/titanic_remix_tamil.htm

டைட்டானிக் ரீமிக்ஸ்: இணையத்தில்...

>

இணையத்தில் டைட்டானிக் நகைச்சுவை கலவை:

(Titanic Remix Tamil )கில்லி படத்தை வைத்து ரீமிக்ஸ் செய்யப்பட்ட டைட்டானிக் படத்தை அனைவரும் பார்த்திருக்கலாம். அதை நான் இப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்.

நேரடியாக அதை இணையத்திலே பார்க்கலாம்.

இணையத்தில் பார்க்க : http://www.sarugu.com/titanic_remix_tamil.htm

(Download Titanic Remix Tamil) டைட்டானிக் நகைச்சுவை கலவையை உங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்வரும் இணைப்பை http://sarugu.com/videos/downloadtitanicremixtamil.htm சொடுக்கினால் பதிவிறக்க இணைப்பு உள்ள பக்கத்திறகுச் செல்வீர்கள். அங்கு சென்று எவ்வாறு் பதிவிறக்கம் செய்வது? என்பதன் வழிமுறையை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் என்னுடைய சருகு.தளத்தில் இலவச மென்பொருள் விபரங்களைத் தெரிந்துகொள்ள: http://sarugu.com/freewares

இலவச படத்தொகுப்புக்குச் செல்ல: http://sarugu.com/images

இந்த video -வைப் பற்றி இங்கு மறுமொழி இட மறந்துவிடாதீர்கள்.

இணையத்தில் தமிழ் விளம்பரம்

>

வித்தியாசமான முயற்சியில் பலர் இறங்கி சாதிப்பது அன்று மட்டுமல்ல இன்றும் அனைத்துத் துறைகளிலும் அது நடந்து கொண்டே இருக்கிறது.
அவ்வாறு இணையத்தில் வித்தியாசமாகச் சாதிக்க நேரிட்டு மில்லியன் டாலர்களை அவருடைய http://www.milliondollarhomepage.com/ மூலம் அள்ளியவர் தான் அலெக்ஸ் (பிரிட்டீஷ் காரர்).

அவரைப் போலவே நம்மூர்ல ஒருத்தர் (லோகேஷ்) அதுவும் தமிழில் http://tamilads.net/ என்ற தளத்தை தொடங்கி உள்ளார். ஒரு பிக்சல் (pixel) பத்து பைசாவுக்கு விற்கிறார்.

இலவசமாகவும் நமது வலைப்பதிவுகளை அங்கே விளம்பரப்படுத்தலாம். யோசிக்க வேண்டாம் உங்க வலைப்பதிவை விளம்பரப்படுத்த ஒரு சின்ன படத்தை எடுத்துக்கொண்டு தமிழ்ஆட்ஸ்.வலை க்குப் போங்க.

உலகவலை.சருகு.தளம்

>

என்னுடைய சருகு.தளத்தை ( http://www.sarugu.com/ ) தமிழ் வலைப்பதிவிற்கு அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இங்கே இலவச மென்பொருள், இலவச Online Service, மற்ற பிற இணையம் சார்ந்த இலவசங்களைத் தரும் இணையதளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

இலவச மென்பொருள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் என்னால் இத்தளத்தில் தர முடியும். ஆனால் அது விரைவில் இயலாது. சிறிது சிறிதுதாகத்தான் தகவல்களைப் பதிய முடியும். அதனால் புதிய தகவல்களை வாரம் ஒரு முறை பதிந்து கொண்டே இருப்பேன். தவறாமல் வந்து தகவல்கள் பெற்றுச் செல்லவும்.

தற்போது இது ஆங்கிலத்தில் மட்டுமே பதியப்படுகிறது. விரைவில் தமிழ் பதிப்பும் வெளிவரும்.

ஏன்?

நண்பர்கள் முதற்கொண்டு அனைவரும் இதைத்தான் கேக்குறாங்க! எதற்கு "சருகு"ன்னு பெயர் வச்சீங்க?

மரங்களை வெட்டாதீர்கள்! என்ற அறைகூவலைத் தான் இவ்வாறு சுருக்கமாக அதனோடு தொடர்புடைய ஒரு சொல்லுடன் சேர்த்து பெயர் வைத்துள்ளேன். மண்வளச் செழிப்பிற்கு சருகு போன்றவற்றை சேகரித்து பயன்படுத்தினால் தான் நல்ல பலன் கிடைக்கும். அவ்வாறு சருகுகளைச் சேகரிக்க மரங்கள் வேண்டுமே?!

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்!

புது வீடு

>

இந்தப் புது வீட்டுல அந்தப் பழைய வீடுகளின் அனைத்துப் பதிவுகளும் இங்கேயும் இருக்கும். ஆனால் சிறிய அளவில்தான் இருக்கும். அதாவது "சருகு" மற்றும் "முதல்தமிழில்" பதியப்படும் பதிவின் முதல் பத்தி மட்டுமே இங்கே பதியப்படும். மற்றவை "மேலும் படிக்க..." என்ற இணைப்பைச் சொடுக்குவதன் மூலமாக அந்த முழு பதிவையும் அங்கே சென்று படிக்கலாம்.

பெரும்பாலான பதிவுகள் அந்தப் பழைய வ.பதிவுகளிள்தான் இடம் பெறும். ஆனால் ஒரு சில பதிவுகள் இங்கேயே இடம் பெற்று விடும். அதனால் வாசகர்கள் எரிச்சல் அடைய வேண்டாம்.

தமிழ்மணத்தில் திரட்டமுடியாத "ப்ளாக்கர் பீட்டா" பதிவுகள்:

http://tamilbasic.blogspot.com - முதல்தமிழ்
இது ஒரு "தமிழ்இணைய தொழில்நுட்ட்பப்" பதிவு.

http://sarugu.blogspot.com - சருகு
இதைச் "சமூகம் மற்றும் பொதுவானவைகள்" என வகைப்படுத்தலாம்.

எதற்காக இவ்வலைப்பதிவு?

>

அண்மையில் ப்ளாக்கர் தளம் "ப்ளாக்கர் பீட்டா" கொடுத்து தனது சேவையை மேம்படுதிக் கொண்டதை தமிழ் வலைப்பதிவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் அதிகம் பாதிக்கப் பட்டது இந்த தமிழ் வலைப்பதிவர்கள் தான்.

அவர்களின் அடைப்பலகைகள் (Templates) சின்னா பின்னமாகி சிதைந்து விட்டது. அவ்வாறு பாதிக்கப் பட்டதில் நானும் ஒருவன். ஆனால் நான் அடைப்பலகையில் சில மாற்றங்கள் செய்ததன் மூலமாக சரி செய்து விட்டேன். அதன் பிறகும் ஒரு பிரச்சனை இருந்தது. என்னவேன்றால் "ப்ளாக்கர் பீட்டா" வில் உள்ள வலைப்பதிகளில் புதிதாக எந்தப் பதிவு கொடுத்தாலும் அதை தமிழ்மணத்தில் திரட்ட முடியவில்லை.

தமிழ்மணத்தில பிழைச்செய்தி வந்தது. ஆனால் நான் இன்னும் அந்த "ப்ளாக்கர் பீட்டா" வின் "Customise" என்ற option-ஐப் பயன்படுத்தி அதில் மற்றங்கள் செய்வதில்லை.

இதன் காரணமாகவே அங்கே பதியப் படும் புதிய பதிவுகளை தமிழ்மணத்தில் திரட்டுவதற்காக இந்த புதிய வலைப்பதிவை பயன்படுத்த உள்ளேன். குடியிருந்த வீட்ட விட்டு வரமுடியவில்லை அதுதான் காரணம்.

தமிழ்மணத்தில் திரட்டமுடியாத "ப்ளாக்கர் பீட்டா" பதிவுகள்:

http://tamilbasic.blogspot.com - முதல்தமிழ்
இது ஒரு "தமிழ்இணைய தொழில்நுட்ட்பப்" பதிவு.

http://sarugu.blogspot.com - சருகு
இதைச் "சமூகம் மற்றும் பொதுவானவைகள்" என வகைப்படுத்தலாம்.

தமிழே முழு முதல் மொழி

>

தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த புதிய வலைப் பதிவு மூலமாக வணக்கத்தைத் தெரிவித்துக்க் கொள்கிறேன். இந்த புதிய http://tamilone.blogspot.com மூலமாக மீண்டும் இணையத்திற்கு எனது ஆக்கங்களை தருவதில் மட்டுமல்லாமல் அதைத் தமிழில் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வலைப்பதிவர்கள் இவ்வலைப்பதிவிற்கு அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன்.